சிதம்பரம் அரசு கல்லூரியில் வேதியியல் ஆய்வகத்தில் சிதம்பர ராஜன் (34) என்ற நபர் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் அந்தக் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அந்த மாணவி சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக குற்றவாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் சிதம்பர ராஜனை கைது செய்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மாணவியின் குற்றச்சாட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருவதாகவும், சிதம்பர ராஜனிடம் வாக்குமூலம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.