குமரி பாதிரியார் மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி பாலியல் புகார்: 6 பிரிவுகளில் வழக்கு

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (13:19 IST)
கன்னியாகுமரி பாதிரியார் மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ளதை அடுத்து அவர் மீது ஆறு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
குமரி மாவட்டம் கொல்லங்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றி வந்த நிலையில் இளம்பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் பழகி ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் செய்திகள் வெளியானது.
 
இதனை அடுத்து நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாதிரியார் பெனடிக் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கல்லூரி மாணவி பாதிரியார் பெனடிக் மீது சைபர் கிரைம் போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
 
செல்போனில் தன்னிடம் சேட்டிங் செய்தபோது தவறான தகவல்களை பகிர்ந்ததாகவும் அவரது நடவடிக்கை பிடிக்காததால் அவரது தொடர்பை துண்டித்த நிலையில் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்