ராயல்டி என்கின்ற பெயரில் அடியாட்களை கொண்டு பண வசூல்! - எர்த்மூவர் உரிமையாளர் நல சங்கம் புகார்!

புதன், 11 அக்டோபர் 2023 (17:47 IST)
எஸ்.ஆர்.குரூப்ஸ் என்ற நிறுவனம் சட்டவிரோதமாக ராயல்டி தொகை வசூல் செய்வதாகவும் அதுல மண் எடுப்பதற்கான உரிம சீட்டு வழங்கும் நடைமுறையை எளிமையாக்கவும் வலியுறுத்தி கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 



இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் " கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் இருந்து எர்த் ஒர்க் செய்த மண்ணை வெளியில் எடுத்து செல்வதற்கும் பிறகு திரும்ப ரீபில்லிங் செய்வதற்கும் ராயல்டி தொகை இரண்டு முறை எந்த ரசீதும் இல்லாமல் எஸ் ஆர் குரூப்பை சேர்ந்த செல்வம், மாரியப்பன், பாலமுருகன் என்பவர்கள் அடியாட்கள் மூலம் தங்களது லாரிகளை தடுத்து நிறுத்தி ராயல்டி என்கின்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும் பணத்தை தரவில்லை என்றால் லாரியை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தினம்தோறும் பல லட்சம் ரூபாயை அவர்கள் வசூல் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் ஏற்கனவே புதிய வாகன விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, சுங்க கட்டண விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு போன்றவை இருக்கின்ற நிலையில்  இவர்களது நடவடிக்கைகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் எனவே ராயல்டி என்கின்ற பெயரில் பணம் வசூலிக்கும் முறையை நீக்கி மண் எடுப்பதற்கு உரிம சீட்டு வழங்கும் நடைமுறையை எளிமையாக்கி உரிய அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுவின் நகலை முதலமைச்சர்,  நீர்வளத்துறை அமைச்சர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்