கோவை தொகுதி கமல் கட்சிக்கா? கம்யூனிஸ்ட் கட்சிக்கா? பரபரப்பு தகவல்.

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:33 IST)
வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளுக்கும் நிலையில் திமுக கூட்டணியில் தற்போது தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் கோவை சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். 
 
ஆனால் கோவை தொகுதியில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு இருக்கும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே கோபாலகிருஷ்ணன் பேட்டி அளித்தபோது 'திமுக கூட்டணியில் மீண்டும் மதுரை கோவை தொகுதியை ஒதுக்க நாங்கள் வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்
 
 மொத்தத்தில் கோவை தொகுதி கமல்ஹாசன் கட்சிக்கு கிடைக்குமா? அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்