தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்வதை அடுத்து அவர் தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மே 23ஆம் தேதி வெளிநாடு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் செல்கிறார். அங்கு நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தொழில் அதிபர்களை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிங்கப்பூர் மாநாட்டை முடித்தவுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அந்நாட்டின் தொழில் அதிபர்களிடம் கோரிக்கை விடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் முதல் தமிழக முதல்வரின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் காரணமாக தமிழகத்தில் முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.