சென்னை தி.நகர் பேருந்து நிலையம் மற்றும் மாம்பலம் ரயில்வே நிலையத்திற்கு இடையே ஆகாய நடைமேடை கட்டப்பட்டு வந்த நிலையில் இந்த நடைமேடையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு வசதியாக 570 மீட்டர் நீளம் மற்றும் நான்கு மீட்டர் அகலம் கொண்ட ஆகாய நடைமேடை கட்டப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி செல்வதற்கு சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் தியாகராய நகர் பஸ் நிலையத்தை ஒட்டி நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் உஸ்மான் சாலையில் மின்விளக்கு கண்காணிக்க கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆகாய நடைமேடையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தி நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆகாய நடைமேடை 28 கோடியே 45 லட்சம் செலவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது