கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! ரூ.2000 நோட்டு விவகாரம் குறித்து முதல்வர்..!

Webdunia
சனி, 20 மே 2023 (11:02 IST)
கர்நாடக மாநிலத்தின் தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் தான் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
நேற்று இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 2000 நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களும் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது குறித்து கூறியிருப்பதாவது:
 
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்