மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு இன்று முதல்வர் மரியாதை

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (08:04 IST)
நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் காலமானார்கள் என்பதும் இதற்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று குன்னூரில் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிபின் ராவத் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் முதல்வரை அடுத்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்