முதல்வரின் அடுத்த சுற்றுப்பயணம்: இம்முறை அமெரிக்கா, தென்கொரியா என தகவல்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:25 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் அரசுமுறை சுற்றுப்பயணமாக துபாய் சென்று வந்தார் என்பதும் அதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் முதலமைச்சரின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் விரைவில் நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 
 
முதல்வரின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நாடுகள் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்
 
மேலும்  முதல்வரின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்