தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.. டி.கே.சிவக்குமார் அறிவிப்பால் முதல்வர் எழுதிய கடிதம்..!

செவ்வாய், 4 ஜூலை 2023 (10:24 IST)
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும். ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி, ஜூலை மாதத்திற்குரிய 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்
 
ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க அறிவுறுத்த வேண்டும். மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்த நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்