தினமும் பத்திரிகை படித்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது, உங்கள் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் காணும் செய்திகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும், அவ்வாறு தீர்வு காணப்பட்ட செய்திகளை ஊடகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை உங்களின் காலை பணியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும் கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும், விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்கள் எந்தவித குறைபாடின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைய வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மேலும் நாளை முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், 10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்றும், சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.5 ஆக குறைக்கப்படும் என்றும் கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்,.