செங்கம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (13:15 IST)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திருவண்ணாமலை தேசிய பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் லாரி மோதி ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர். 
 
இந்த துயர செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் தனது ஆறுதலை கூறியதோடு  இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டு உள்ளார். 
 
மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதோடு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் மருத்துவர் அறிவுரைத்துள்ளார்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்