குடியரசு தினத்துக்கு கொடியேற்றிய முதல் முதல்வர் பன்னீர்செல்வம் தான்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (09:13 IST)
இந்தியாவின் 68-வது குடியரசு தினவிழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே முதல்வர் பன்னீர்செல்வம் ராணுவ மறியாதையை எற்றி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.


 
 
குடியரசு தினத்துக்கு மாநில ஆளுநர் தான் தேசியக்கொடியை ஏற்றி வைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்துக்கு தனி கவர்னர் இல்லாததாலும், பொறுப்பு கவர்னரான மகாராஷ்ராவின் கவர்னர் வித்யாசாகர் ராவ் குடியரசு தினத்துக்கு கொடியேற்ற மகாராஷ்டிரா சென்றுள்ளதாலும் இந்த ஆண்டு தமிழகத்தில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்ற முடியாத நிலை உருவானது.
 
இதனையடுத்து தமிழகத்தில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றும் வாய்ப்பு முதன் முதலாக நமது முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்துள்ளது. காலை 8 மணிக்கு மெரினா கடற்கரையில் தேசியக் கொடியேற்றி வைத்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.
 
குடியரசு தினவிழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றி வைப்பது இதுவே முதன்முறை. கவர்னர் இல்லாததால் ராணுவ வீரர்களின் அனைத்து அணிவகுப்பு மரியாதையை அவரே ஏற்றுக்கொண்டார்.
அடுத்த கட்டுரையில்