சில மாதங்களுக்குப் பிறகு ஜார்க்கண்ட் நீதிமன்றம் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் பிணையில் வெளியே வந்தார். இந்த நிலையில் முதல்வர் சாம்பாய் சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களின் குழு தலைவராகத் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
இதை அடுத்து, சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் இன்று மாலை அளித்தார். அப்போது ஹேமந்த் சோரன் தன்னை ஆட்சியமைக்க அழைக்கும் படி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் விரைவில் ஹேமந்த் சோரனுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.