மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதா? திண்டுக்கல்லில் பரபரப்பு..!

வெள்ளி, 23 ஜூன் 2023 (15:07 IST)
சமீபத்தில் 500 மதுக்கடைகள் மூடுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில் திண்டுக்கல்லில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திண்டுக்கல் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் திறந்து உள்ளே மது பாட்டில்களை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
 
இந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து திறந்திருக்கும் மது கடையின் உள்ளே சென்று ஊழியர்களிடம் விசாரணை செய்தனர் அப்போது அந்த ஊழியர்கள் மது விற்பனைக்காக கடைகள் திறக்கப்படவில்லை என்றும் மது பாட்டில்களின் இருப்பை சரிபாதிப்பதற்காகவே திறக்கப்பட்டதாகவும் இன்று மாலை இந்த மது பாட்டில் விலை வேறு ஒரு மது கடைக்கு மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
 
இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்களை சமாதானப்படுத்தி போலீசார் கலைந்து செல்ல வைத்தனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்