அப்போது அனுமதி பெறாத டாஸ்மாக் பார்கள் மூலம் 20,000 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் இது பற்றி அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜியிடம் விசாரித்தால் நாம் சிக்கி விடுவோம் என்று கருதி தான் முதல்வர் அவரை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் கூறினார்.
மேலும் டாஸ்மாக் மதுவை குடித்து உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது என்றும் தஞ்சை மதுரை மயிலாடுதுறை லால்குடி மற்றும் சேலத்தில் மது குடித்தவர்கள் இறந்தவர்கள் எண்ணிக்கை தொடருவதை பார்க்கும் போது டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளும் பெரும்பாலும் கள்ளச்சாராயம் தான் என தெரிய வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.