சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதை, போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (13:10 IST)
சென்னை கனமழை காரணமாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இன்று (15.10.2024) அன்று மதியம் 12 மணி நிலவரப்படி சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.
 
1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்
 
i. பெரம்பூர் இரயில்வே சுரங்கப்பாதை கணேசபுரம் சுரங்கப்பாதை
ii.கணேசபுரம் சுரங்கப்பாதை
iii.சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை
iv.துரைசாமி சுரங்கப்பாதை
V.மேட்லி சுரங்கப்பாதை
 
 
2.
மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன
 
1. தானா தெரு
2. வெலிங்டன் முதல் டேம்ஸ் ரோடு
3. சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் சந்திப்பு
4. டேங்க் பங்க் ரோடு
5. ஸ்டெர்லிங் சாலை
6. பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி
7. நீலாங்கரை சந்திப்பு முதல் நீலாங்கரை PS
8. அண்ணா சாலை முதல் எம்ஜிஆர் சாலை வரை
9. பிராட்வே சந்திப்பு
10. பிரகாசம் சாலை
11. ஹைத் மஹால்
12. மண்ணடி மெட்ரோ
13. Blue Star சந்திப்பு
14. சிந்தாமணி
15. ஐயப்பன் கோயில்
16. நெற்குன்றம் ரயில் நகர் நோக்கி, Hp பெட்ரோல் பங்க் 200mt சாலைக்கு அருகில். 17. மேட்டுக்குளம் முதல் தீயணைப்பு நிலையம் வரை.
18. பட்டுலாஸ் சாலை
19. ஹப்லிஸ் ஹோட்டல் 20. பால் வெல்ஸ் சாலை
 
 3. போக்குவரத்து மாற்றம்
 
4. சாலைகளில் விழுந்த மரம் இல்லை, கீழே விழுந்த மரங்கள், அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டன.
 
5. மழைப் பொழிவு காரணமாக ஏதேனும் மாற்றுப்பாதைகள்
 
ஐஸ் ஹவுஸிலிருந்து GRH சந்திப்புக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேனி ஹை ரோட்டை நோக்கி வலதுபுறம் திரும்பி, ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். மேலும் மோட்டார் சைக்கிள்கள் திசைதிருப்பப்படாமல் தங்கள் வழியில் செல்லாம். GRH சந்திப்பில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு மாற்றம் இல்லை.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்