இந்தியாவின் பஞ்சத்தை போக்க ’செயற்கை மழை’ உருவாக்கும் சீனா அரசு

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (16:08 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சத்தை போக்குவதற்கு ’செயற்கை மழை’ உருவாக்கும் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு சீனா அரசு வழங்குகிறது.
 

 
பூமி சூடேற்றம் போன்ற பிரச்சனைகளால் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம், ஏற்படுத்தும் புதிய நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது.
 
மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக முற்றிலும் மழை பொய்த்துப் போய்விட்டது. கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது.
 
இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செயற்கை மழைக்கான தொழிற்நுட்பத்தை வழங்க சீன அரசு முன்வந்துள்ளது. சீன விஞ்ஞானிகள் குழு மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதிக்கு வந்து ஆய்வு செய்தது.
 
இதனையடுத்து, மழை வராத பகுதிகளில் ‘கிளவுட் சீடிங்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மழையை ஏற்படுத்த முடியும் என மஹாராஷ்டிரா மாநில அரசிடம் விஞ்ஞானிகள் குழு எடுத்துரைத்துள்ளது.
 
இதற்கு மஹாராஷ்டிரா மாநில அரசும் ஒப்புதல் அளித்தால் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையத்தினருக்கு இந்த பயிற்சியினை அளிக்கத் தயாராக உள்ளோம் எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை முடிவுற்ற பின் செயற்கை மழை தொழில்நுட்பத்தை முதன்முறையாக நாம் பெற முடியும். அதுமட்டுமின்றி முன்பு சோவியத் ரஷ்யா பல்வேறு சமயங்களில் செயற்கை மழையை பொழிய வைத்தது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்