சென்னையில் லிப்ட் கேட்பது போல் நடித்து பணத்தை கொள்ளையடிக்கும் சிறுவர்கள்; உஷார் மக்களே!

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (14:02 IST)
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிர்கரித்துக் கொண்டே போகும் வேளையில், சென்னையில் சிறுவர்கள் சிலர் லிப்ட் கேட்பது போல் நடித்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவர் ஒரு வழக்கறிஞர். சிவசுப்பிரமணியம் தனது இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு மதுரவாயிலிலிருந்து தாம்பரத்திற்கு  சென்றுள்ளார். குன்றத்தூர் அருகே சென்றபோது சிறுவன் ஒருவன் அவரிடம் லிப்ட் கேட்டுள்ளான்.
 
சிறுவனுக்கு உதவ சிவசுப்பிரமணியன் வண்டியை நிறுத்தியுள்ளார். சற்றும் எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் வண்டியிலிருந்த சாவியை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளான். இதையடுத்து அங்கே புதரில் மறைந்திருந்த சில சிறுவர்கள், சிவசுப்பிரமணியனை நோக்கி ஓடி வந்து ஆயுதங்களுடன் அவரை மிரட்டி செல்போன், லேப்டாப், பணம் மற்றும் தங்கச்சங்கிலி ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து சிவசுப்பிரமணியன் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்