தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக தனது அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் அறைக்கு சென்று அவரை சந்தித்தார்.
முதல்வர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்திப்பு சிறிது நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
ராம மோகனராவ் வீட்டில் சோதனை நடத்தியதை தொடர்ந்து அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களின் பதவி பறிபோகலாம் என தகவல்கள் வருகின்றன.