12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பாக முதல்வர் அறிக்கை

திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:23 IST)
12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பாக  முதல்வர் முக.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.,ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில்  அண்மையில் 12 மணி நேர வேலை மசோதா உள்பட 17 மசோதாக்கள், சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பும் முன்பு சட்ட மசோதாக்களைத் திரும்பப்பெறத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில் இந்த மசோதாக்கள் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது

இந்த நிலையில், இம்மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே  தற்போது 12 மணி நேரவேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பாக  முதல்வர் முக.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முனைப்போடு செயல்படும் இந்த அரசு ஒரு சட்ட முன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ,. அது குறித்து மக்களிடம் இருந்து மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்பட்டால் அவற்றை சீர்தூக்கி பார்திது, அவற்றிக்கு  மதிப்பளிக்கும் வகையில், நடந்துகொள்ளும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும் ‘’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்