இந்தியாவில் ஒரே நாளில் பாதியாக குறைந்த கொரோனா பாதிப்பு.. பொதுமக்கள் நிம்மதி..!

திங்கள், 24 ஏப்ரல் 2023 (11:49 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில் நேற்றைவிட மிகக்குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது.
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பில் இருந்து வந்தாலும் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா வெகுவாக குறைந்திருந்தது.  இந்நிலையில் நேற்று 10,112  என இருந்த கொரோனா பாதிப்புகள் இன்று 6904 என குறைந்துள்ளது.
 
ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.. கொரோனாவால் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65683 என உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்