முதல்வர் ஸ்டாலின் சொந்தக் கட்சியினரை பார்த்தே பயப்படுகிறார் - எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (15:15 IST)
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தன் சொந்த கட்சியினரைப் பார்த்தே பயப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் என்றற பகுதியில்  அதிமுக சார்பில்  நடந்த நிகழ்ச்சியில்  திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட தொணர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவர்களை வரவேற்ற முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

மேலும், முதவர் ஸ்டாலின் தன் சொந்தக் கட்சியினரைப் பார்த்தே பயப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

ALSO READ: பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? அமைச்சர் பொன்முடி தகவல்

நேற்று திமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் கட்சியினர் கண்ணியமாகப் பேச வேண்டுமென எச்சரித்த போது, அமைச்சர் பொன்முடி சிரித்தது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்