கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.. வள்ளுவர் சிலை விழாவில் முதல்வர் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (13:42 IST)
கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே பாலத்தை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் இங்கு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
 
அவர் பேசிய போது கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல மூன்று புதிய படகுகள் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் பயிலரங்கங்கள் நடத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 133 கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவு சார்ந்த போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும் என்றும், தமிழ் திறன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
 
குரலும் உரையும் அரசு அலுவலகங்களை போல தனியார் அலுவலகங்களிலும் எழுத வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிய முதல்வர், கன்னியாகுமரி பேரூராட்சி விரைவில் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்