பிக் பாஸுக்குப் பின் என்ன செய்யப் போகிறீர்கள் ? – சேரனுக்கு ரசிகர் கேள்வி !

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (14:44 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இயக்குனர் சேரன் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது அடுத்த படம் குறித்து பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 70 நாட்களாக ஒளிப்பரப்பாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், முகென், வனிதா, சாண்டி, ஷெரின் ஆகிய 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். சேரன் இந்த முறை அதிக சர்ச்சைகளில் சிக்கியவராக இருந்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளவர்கள் மத்தியில் அதீத எதிர்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் பெற்றுள்ள அவரிடம் இந்த வாரம் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அவர் பிக்பாஸுக்குப் பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு ‘எனது கம்பேக் ஒரு ஸ்ட்ராங்கான கம்பேக் ஆக இருக்கும். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயகக் இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக சரியான படம் அமையாமல் போராடி வரும் சேரனுக்கு இந்தப் படம் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்