செக் மோசடி : ’ஆறடி உயர ’நடிகருக்கு வந்த சோதனை

புதன், 27 பிப்ரவரி 2019 (15:37 IST)
கரூரைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் கிருஷ்ணன். இவரிடம் கடந்த சென்னையை சேர்ந்த விஜய் பிரகாஷ், ஆனந்த் ஆகிய இருவரும் திரைப்படம் தயாரிப்பதற்காக கடந்த ஆண்டு ரூ.10 கோடி வாங்கியுள்ளனர். இதில் இருவரும் ரூ.56,40,000 பணத்தை திரும்ப கொடுத்த நிலையில் பாக்கிப் பணத்தை தரவில்லை என்று தெரிகிறது.
இப்படத்தில் நடித்த நடிகர் நெப்போலியன் மொத்த,கடன்  தொகைக்கும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். பட வெளியீட்டின் போது விஜயபிரகாஷ், ஆனந்த் ஆகிய இருவரையும் தொடர்பு கொண்ட கோபாலகிருஷ்ணன் மீதமுள்ள தொகையை கேட்டுள்ளார்.

இப்பணத்திற்கு முழுபொறுப்பை ஏற்றுக்கொண்டு ரூ. 25 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார். பாக்கி தொகைக்கு ரூ. 28,54,000 காசோலை வழங்கியுள்ளார்.
 
ஆனால் நெப்போலியன் கொடுத்த காசோலை திரும்பி வந்ததால் இதுசம்பந்தமாக கரூர் விரைவு நீதிமன்றத்தில்  நடிகர் நெப்போலியன் மீது செக் மோசடி சம்பந்தமாக வழக்கு தொடந்தார். எனவே இவ்வழக்கு சம்பந்தமாக நெப்போலியனுக்கு சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் ஆஜராகாததால் நெப்போலியனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்