சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா! – முழு மருத்துவமனையும் சோதனை!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:53 IST)
சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியர்கள், நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், மருத்துவமனையை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்