இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று பிஎச்டி போன்ற உயர்நிலை ஆராய்ச்சி படிப்புகளை தொடரவும், யுஜிசி நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுக்கு இரண்டு முறை இந்த நெட் தேர்வுகளை நடத்துகிறது.
அதன் பின், யுஜிசி நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 6.84 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தற்போது, யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன, இதில் மொத்தம் 1,70,734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், பிஎச்டி க்கு தகுதியானவர்கள் 1,12,070 பேர் உள்ளனர்.