இனிமேல் கிணற்றை காணோம்னு வரமாட்டாங்க! – டிஜிட்டல் மேப்பிங்கில் சென்னை!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:57 IST)
தமிழக தலைநகரான சென்னை டிஜிட்டல் மேப்பிங் செய்யப்பட இருப்பதால் வடிவேலு பாணி கிணற்றை காணோம் புகார்கள் இனி வராது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையை டிஜிட்டல் முறையில் லைவ் மேப்பிங் செய்யும் வகையில் டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் என்ற திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்மூலம் சென்னை முழுவதும் உள்ள நீர்நிலைகள், காலியிடங்கள், கட்டிடங்கள், நிலத்தடியில் புதைக்கப்படும் வயர்கள் அனைத்தும் மேப்பிங் செய்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் “வடிவேலு காமெடி போல கிணற்றை காணோம், குளத்தை காணோம் லெவல் புகார்களும் நமக்கு வருகின்றன. இந்த டிஜிட்டல் ஸ்கேலிங் மூலமாக அரசு நிலங்களை, நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் எளிதாக கண்டறிய முடியும். வருவாய்த்துறையில் உள்ள தகவல்கள் மாறாது என்பதால் ஆக்கிரமிப்புகளை எப்போது வேண்டுமானாலும் அகற்ற முடியும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்