ரயில் நிலையத்தின் விளம்பர டிவியில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாட்னா ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் என்பதும் இந்த ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாட்னா ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த விளம்பர டிவியில் திடீரென மூன்று நிமிடத்திற்கு ஆபாச வீடியோ ஒளிபரப்பானதால் அதிர்ச்சியாக ஏற்பட்டுள்ளது.