சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்: முழு விவரங்கள்..!

Mahendran

திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (15:52 IST)
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இன்று முதல் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைத்ததுடன், முதல் கட்டமாக 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் உட்பட மொத்தம் 135 மின்சார பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
 
இந்த 55 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ள வழித்தடங்கள் குறித்த தகவல்கள் இதோ:
 
தடம் எண் MAA2: சென்னை விமான நிலையம் முதல் சிறுசேரி ஐடி பூங்கா வரை. (பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக்கழகம், ஈச்சங்காடு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர் வழியாக)
 
தடம் எண் 95X: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் திருவான்மியூர் வரை. (வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், காரப்பாக்கம், துரைப்பாக்கம் வழியாக)
 
தடம் எண் 555S: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் சோழிங்கநல்லூர் வரை. (வண்டலூர், கண்டிகை, மாம்பாக்கம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி வழியாக)
 
தடம் எண் 19: தியாகராய நகர் முதல் திருப்போரூர் வரை. (சைதாப்பேட்டை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், கேளம்பாக்கம் வழியாக)
 
தடம் எண் 102: பிராட்வே முதல் கேளம்பாக்கம் வரை. (சேப்பாக்கம், அடையார், இந்திரா நகர், கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர் வழியாக)
 
தடம் எண் 570/570S: கோயம்பேடு முதல் கேளம்பாக்கம் / சிறுசேரி ஐடி பூங்கா வரை. (வடபழனி, கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி வழியாக)
 
இந்த புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள், பயணிகளுக்குப் புதிய வசதியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்