சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் எஸ்கலேட்டரில் 13 வயது மாணவன் ஒருவர் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ளது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் ஒரு கிளை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடையில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தாயுடன் கடைக்கு வந்த 13 வயது ரனில் பாபு என்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டர் படிக்கட்டியில் சிக்கி விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.