சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேந்த 68 வயது ரவி என்பவர் அந்த பகுதியில் அரசியல் பிரமுகராக இருந்து வருகிறார். இவர், 13 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் உடனடியாக ரவியை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போக்சோ சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் அரசியல் பிரமுகர் என்பதால் அவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன் கட்சியினர் மற்றும் உறவினர்கள் திடீரென சாலைமறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக கலைந்து செல்லும்படி கூறியபின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதனால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது