இவ்வளவு மழையிலும் நனையாத சென்னை: வெதர் ரிபோர்ட்!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (14:45 IST)
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் கடும் மழை பெய்தது. ஆனால், சென்னையில் மழை எட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போது சென்னையின் மழை அளவை குறித்து ரிபோர்ட் வெளியாகியுள்ளது.
 
அதாவது, அக்டோபர் 1 முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக 344 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 303 மிமீ மழைதான் பெய்துள்ளது. 
 
குறிப்பாக சென்னையை பொருத்த வரை 619 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 321 மிமீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 48% குறைவு. 
இந்நிலையில் அடுத்து தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மாலத்தீவு பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
 
இதனால், தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 
 
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஆனால், மழையை எதிர் பார்க்க முடியாது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்