தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும், சென்னையில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாட்டில் இன்று முதல் 17ம் தேதி வரை பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைப்பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K