சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள்.. மின்சார ரயில்கள் ஓடுமா?

Siva

புதன், 12 மார்ச் 2025 (07:51 IST)
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
 
இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆம் தேதிகளில், கும்மிடிப்பூண்டி செல்லும் கீழ்க்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
 
காலை 8:05 மணி
காலை 9:00 மணி
காலை 9:30 மணி
காலை 10:30 மணி
காலை 11:35 மணி
 
அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட் நோக்கி கீழ்க்கண்ட நேரங்களில் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
 
காலை 9:55 மணி
காலை 11:25 மணி
மதியம் 12:00 மணி
மதியம் 1:00 மணி
மதியம் 2:30 மணி
மாலை 3:15 மணி
 
மேற்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு மாற்று திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்