அனுமதி இல்லாத நேரத்தில் பட்டாசு வெடிப்பு: சென்னையில் 22 வழக்குகள் பதிவு!

வியாழன், 4 நவம்பர் 2021 (16:08 IST)
அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக சென்னையில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது 
 
இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை காவல் நிலையம், கீழ்ப்பாக்கம் காவல் நிலையம், டிபி சத்திரம் காவல் நிலையம், ஓட்டேரி காவல் நிலையம், ஆவடி காவல் நிலையம், ஆயிரம் விளக்கு காவல் நிலையம், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
கடந்த ஆண்டு இதே சென்னையில் 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்