5 வழக்குகளில் 4 வழக்கில் ஜாமின் பெற்ற சிவசங்கர் பாபா!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (14:22 IST)
சென்னையை அடுத்த சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நான்கு வழக்குகளில் அவருக்கு தற்போது ஜாமின் கிடைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது 
 
சென்னை அருகே சர்வதேச பள்ளியை நடத்தி வந்தவர் சாமியார் சிவசங்கர் பாபா என்பதும் அவரது பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாணவிகள் சிலர் கொடுத்த பாலியல் புகார் காரணமாக சிவசங்கர் பாபா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
 
சிவசங்கர் பாபா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது புகார்கள் குவியத் தொடங்கியது வழக்குகள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நான்கு வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாகவும் இன்னும் ஒரே ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து விட்டால் அவர் விடுதலையாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சிவசங்கர் பாபாவுக்கு மீதமுள்ள ஒரு வழக்கில் ஜாமீன் கிடைக்க விடாமல் செய்ய காவல்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் இருப்பினும் சிவசங்கர் பாபா மிக விரைவில் வெளியே வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்