பொள்ளாச்சி விவகாரம்! அதிமுக - திமுக புள்ளிகளுக்கு தொடர்பு - தினகரன்

வியாழன், 14 மார்ச் 2019 (14:09 IST)
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும்,  தேர்தலுக்கு பின் உண்மைகள் வெளிவரும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்தித்து பேசிய   பிறகு அமமுக   துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அவர் கூறியதாவது :
 
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக சார்பில்  விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வேட்பாளர் பட்டியலும் விரையில் வெளியிடப்படும். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அரசு பதட்டத்துடன் செயல்படுவதால் சந்தேகம் வருகிறது. இதற்கு உரிய விசாரணை தேவை. நடாளுமன்ற தேர்தலுக்குப் பின் பெரும் மாற்றம் வரும். அப்போது உண்மைகள் வெளிவரும். இவ்வாறு தினகரன் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்