பணியில் இருந்த சென்னை காவல் ஆணையருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையராக சமீபத்தில் பொறுப்பேற்றவர் சங்கர் ஜிவால். இன்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்த சங்கர் ஜிவால் காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது அலுவல்களை மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.