இதனையறிந்த ரமேஷ் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் கீதா மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ், மாறாக புகார் கொடுத்த ரமேஷையும் அவரது மகனையும் அரை நிர்வாணமாக்கி காவல் நிலையத்தில் அமரவைத்த்து கொடுமைபடுத்தினர்.
இதுகுறித்து ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், பாதிக்கப்பட்ட ரமேஷிடம் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரமேஷுக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்கு சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி 30,000 ரூபாய் அபராதமாக தர வேண்டும் என உத்தரவிட்டார்.