கஷ்டப்பட்டு திருடியும் அனுபவிக்க முடியல! – போலீஸாரிடம் கலங்கிய திருடன்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (11:57 IST)
சென்னையில் திருடன் ஒருவன் வீட்டுக்குள் புகுந்து திருடிய போதே போலீஸில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூர் அருகே செட்டியார் அகரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி சுந்தரவள்ளி. இவரது மகன் அருள்முருகன் தனது குடும்பத்துடன் அயர்லாந்தில் உள்ள நிலையில் தாய் வீட்டில் நல்லபடியாக இருப்பதை கவனித்துக் கொள்ள இணைய வசதி கொண்ட சிசிடிவி கேமராவை சுந்தரவள்ளி வீட்டில் பொருத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சுந்தரவள்ளி வீட்டை பூட்டி விட்டு அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் ஆசாமி ஒருவர் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைவதை அயர்லாந்தில் இருந்து அருள்முருகன் லைவில் பார்த்துள்ளார். உடனே இதுகுறித்து உறவினருக்கு தெரிவிக்க, அவர்கள் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸார் சுந்தரவள்ளி வீட்டு பின்பக்க சுவர் வழியாக லேப்டாப் சகிதம் குதித்த திருடனை பிடித்துள்ளனர். விசாரணையில் திருடியவர் பெயர் முரளி என்றும் இதுவரை 4 முறை திருட முயற்சித்து திருடி வரும் வழியில் போலீஸுடம் மாட்டி கொண்டதாக கூறியுள்ள முரளி, இதுவரை திருடிய பொருட்களை கொண்டு வாழ முடியவில்லை என காவல்துறையினரிடம் வேதனையுடன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்