மாஸ்க் அணிவது கட்டாயம்: சென்னை மக்களுக்கு பெருநகர மாநகராட்சி எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (05:47 IST)
மாஸ்க் அணிவது கட்டாயம்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 98 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்தார். மேலும் சென்னையில் மட்டும் மொத்தம் 201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் சென்னையில் உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும் போது கொரோனா அணியாமல் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் அது மட்டுமின்றி அவர்களுக்கு வெளியே செல்வதற்கான சிறப்பு அனுமதி சீட்டும் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை பெருநகர மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
 
மேலும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்ததை அடுத்து இனிவரும் 14 நாட்களிலும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று எந்தவித காரணமும் இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் குறிப்பாக வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்