அடுத்த 2 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva

புதன், 19 ஜூன் 2024 (08:25 IST)
தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் மேல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து ஜூன் 21 ஆம் தேதி வரை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்த நிலையில் இன்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட இரண்டு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்