9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:16 IST)
வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளும் கிட்டத்தட்ட நிரம்பி உள்ளது என்பதும் இந்த ஆண்டு பொதுமக்கள் தண்ணீர் கஷ்டம் இன்றி இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என்று கூறிய 9 மாவட்டங்கள் பின்வருமாறு:
 
 நீலகிரி கோவை ஈரோடு ராமநாதபுரம் விருதுநகர் தென்காசி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்