சென்னையில் இடியுடன் கூடிய கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (12:39 IST)
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
 
தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த குறைந்த காற்றாழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய மேற்கில் உள்ளது. இதனால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில்  கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
 
சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் பருவமழை இதுவரை வழக்கத்தை விட 93 சதவீத அளவில் பெய்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்