சென்னை புறநகர் ரயில்களின் புதிய அட்டவணை: 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்..!

சனி, 15 ஜூலை 2023 (10:17 IST)
சென்னை புறநகர் ரயில்வே புதிய அட்டவணை வெளியாகி உள்ள நிலையில் அதில் 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மின்சார ரயில்களின் கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும்  மாற்றி அமைக்கப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான புதிய ரயில்வே அட்டவணை தற்போது வெளியாகியுள்ளன. 
 
இந்த அட்டவணையின்படி சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் 16 ரயில்களும் தாம்பரம் - வேளச்சேரி வழித்தடத்தில் 19 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பேருந்து கட்டண உயர்வுக்கு பின்னர் ரயில்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் ரயில்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது அநீதியானது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
எனவே பொதுமக்களின் வசதியை கணக்கில் கொண்டு ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கமளித்தபோது, ‘பராமரிப்பு காரணமாக ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூட்ட நெரிசல் இல்லாத மற்றும் இரவு நேரத்தில் உள்ள ரயில்கள் மட்டும்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்