4 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

வெள்ளி, 14 ஜூலை 2023 (13:25 IST)
நான்கு மாவட்டங்களில் இன்று மாலை கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்திலும் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மாலை கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்