இந்தியாவின் சிறந்த கல்வி நிலையம்: சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:53 IST)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள் குறித்த பட்டியல் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆண்டு வெளியான பட்டியலில் சென்னை ஐஐடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை ஐஐடி இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிலையங்களில் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு பட்டியலிலும் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தகவலை மத்திய கல்வி துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிலையத்தின் புதுமையான முயற்சிகள், ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து முதலிடம் பெற்ற சென்னை ஐஐடி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வருவதாக கல்வியாளர்கள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்