சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகள் காயம்

Mahendran

புதன், 10 ஜனவரி 2024 (11:17 IST)
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நம்பள்ளி ரயில் நிலையத்தில் இன்று சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் காலை 9:15 மணியளவில் நடந்ததாக தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராகேஷ் தெரிவித்தார்.
 
இந்த சம்பவத்தில் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் ரயிலின் கதவுகளுக்கு அருகில் நின்றிருந்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என ராகேஷ் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட சார்மினார் நம்பள்ளி ரயில்நிலையம் அருகே தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் இந்த விபத்து குறித்து கூடுதல் தகவல்கள் அறிய விரைவில் பிரத்யேக எண் அறிவிக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்